செவ்வாய், 14 டிசம்பர், 2010

உணவு பழக்க வழக்கம்

         விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் உணவருந்துகின்றனர் இந்த கேள்வியை 50 ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால் அதற்கான விடை இப்பொழுதுள்ள சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும். விண்வெளி பயணத்தின் தொடக்க காலங்களில் நீர் தன்மை எடுக்கபட்டு டிžப்களில் அடைக்கபட்டு இருந்த பேஸ்ட் போன்ற உணவுகளை ஸ்டராக்களின் மூலம் உறிஞ்சி தங்கள் உணவு தேவைய விண்வெளி வீரர்கள் பூர்த்தி செய்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பூமியில் இருப்பதைபோலவே விண்கலத்திலும் விண்வெளி வீரர்கள் உணவருந்த தொடங்கி விட்டனர்.புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில்  உணவு மற்றும் பருகும் திரவங்களை எச்சரிக்கையுடன் கையாளவிட்டால் அவை மிதக்க ஆரம்பித்து விடும் இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக உணவும், பருகும் திரவங்களும் நீர் உறிஞ்சப்பட்டு பவுடர் வடிவில் பாதுகாப்பாக அடைக்கபட்டு உள்ளன.பருகும் குளிர் பானங்களை அருந்த விரும்பும் விண் வெளி வீரர்கள்
ஒரு பிரத்யேக டிžப் மூலம் பவுடர்களில் தண்ணீர் சேர்த்து அருந்துகின்றனர்.உணவு பொருட்கள் அனைத்தும் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோநீர்த்தன்மை உறிஞ்சப்பட்டு கெடாமல் பாதுகாக்கபடுகின்றன.அசைவ உணவு வகைகள் ரேடியேசனுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் உபயோகத்
தன்மை நீட்டிக்கபடுகிறது.

பூமியில் சாப்பிடுவதைப்போலவே விண்வெளிவீரர்களும் ஒரு நாளைக்கு  3 வேளை உணவருந்துகின்றனர். இடையிடையே சிற்றூண்டிகளும் உண்டு. உணவுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கு முறையாக அவர்கள் உணவருந்தும் வரிசைப்படி அடுக்கப்பட்டு இருக்கும்.அவை தரையில் சிந்தி மிதக்காவண்ணம் ஒரு வலையில் பூட்டப்பட்ட டிரேகளில் பாதுகாப்பாக வைக்கபட்டு இருக்கும். உணவு வேளையின் போது விண்வெளிகலத்தின் மத்திய பகுதியில் இருக்கும் உணவருந்தும் இடத்திற்கு விண்வெளி வீரர்கள் செல்கின்றனர்.

உறையவைக்கபட்டு உலரவைக்கப்படு உள்ள உணவுகள்,மற்றும் நீர்த் தன்மை நீக்கபட்ட குளிர் பானங்களை நீர் சேர்க்கின்றனர். குளிர் நீர், சுடு நீர் பெறுவதற்கான ஒரு தனி சாதனம் விண்கலத்தில் வைக்கப்படு உள்ளது.
உணவுப்பொருட்கள் 160 டிகிரி முதல் 170 டிகிரி பேரண்ட் ஹிட் உள்ள ஏர் கண்விக்ஷன்களில் வைத்து சூடுபடுத்தி கொள்கின்றனர். சராசரியாக ஒருவேளை உணவை தயாரிப்பதற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை எடுத்து கொள்கின்றனர்.

விண்வெளி வீரர்கள் அவர்கள் உணவு அடங்கிய கண்டெய்னர்களை பேப்ரிக் பாஸ்ட்னர் உதவியுடன் ஒரு சாப்பாட்டு டிரேயில் இணைத்து இருப்பார்கள்.அந்த டிரே சுவர் அல்லது விண்வெளி வீரரின் இடுப்புடன் இணைந்து இருக்கும். கத்தரி கோலால் உணவு பாக்கெட்டுகளை திறந்து கத்தி போர்க் மற்றும் ஸ்பூன்களின் உதவியால் உணவருந்துகின்றனர்.
ஒவ்வொரு விண்கலத்திலும் விண்வெளி வீரர்களுக்கு அந்த விண்வெளி பயணம் முடியும் வரைக்கும் தேவையான உணவு சேமித்து வைக்கபட்டு இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவசர சூழ்நிலை கருதி ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் அதிகப்படியாக 3 வாரங்களுக்கு பயன்படுத்தக்கூடிய உணவு (ஒரு நாளைக்கு ஒரு விண்வெளி வீரருக்கு 2000 கலோரி சத்து அளிக்க கூடிய உணவு)இருப்பில் இருக்கும். இவை அனைத்தும் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக Ûவைக்க்கப்பட்டு இருக்கும்.
விண்வெளி வீரர்கள் சாப்பிடுவதற்கு நிறைய விதவிதமான உணவுப்பொருட்கள் இருந்தாலும் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் அவர்களது பசியின் அளவு குறைவாக இருக்கும், அவர்களால் உணவின் வாசனையை உணர முடியாது. எனவே உணவின் உண்மையான சுவை அவர்களுக்கு தெரியாது. உப்பு மிளகுத்தூள்,கெட்சப் முதலியவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அவை மிதப்பதை தவிர்ப்பதற்காக திரவ பானங்களில் உப்பு , மிளகுத்தூள் சேர்ப்பதை தவிர்க்கின்றனர். விண்வெளி வீரர்கள் பலவகையிலும் பாதுகாக்கபட்ட பதப்படுத்தப்பட்ட நவீன கருவிகளின் உதவியோடு தயாரிக்கபட்ட சாதாரண உணவு வகைகளை திருப்தியாக உண்ண முடிகிறது.

சாதாரண உணவுகளுக்கும் விண்வெளி உணவுகளுக்கும் அதை தயாரிப்பதிலும், பேக்கிங் செய்வதிலும் மட்டுமே வேறுபாடு உள்ளது. விண்வெளி உணவுகளை மிக கவனமாக பேக்கிங் செய்யப்படு இருக்க வேண்டும்.சிறு துகள் கூட விண்வெளி கலத்தில் சிதறுமே ஆனால் மிககுறைந்த புவி ஈர்ப்பு விசை உள்ள சூழ்நிலையில் அவை விண்வெளிகலத்தில் உள்ள வெளியேற்றும் பாதைய அடைத்து கொள்ளாலாம் அல்லது விண் வெளி வீரரகளின் மூக்கு மற்றும் வாயில் சென்று அவர்களுக்கு சுவாசத்தில் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

விண்வெளியில் பசி:

பூமியின் பல ஆயிரம்  மைல்களுக்கு மேலே பறக்கும் விண்கலத்தில் உணவுப்பொருட்கள் பூமியில் இருப்பதைப்போலவே சுவை உடையனவாக இருக்குமா? இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் இல்லை என்றே பதில் சொல்கிறார்கள்.எடையே இல்லாத சூழலில் உணவின் மணம் மூக்கிற்கு செல்ல வாய்ப்பில்லை.உணவின் சுவையில் மணம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிப்பது.ஆனால் விண்வெளி வீரர்கள் வாசனைகளை அறிய முடியாமல் சுவையை இழக்கிறார்கள்.
விண்வெளியில் வீரர்கள்   எடையில்லாமல் இருப்பதால்  விண்வெளி வீரர்களின் உடம்பின் மேற்புறம் நீர்  தேங்கி இருக்கும். எப்பொழும் அவர்களுக்கு (சளிபிடித்தால் மூக்கு அடைப்ப்ட்டு இருப்பது போல்) மூக்கு அடைத்து கொண்டிருக்கும்.

முதன் முதலில் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் போது அங்கு சிறிது நேரமே இருந்ததால் உணவு பிரச்சினையோ மற்ற பிரச்சினைகளோ எழவில்லை. இன்றைய விண்வெளி வீரர்களுக்கு  உணவு வகைகளை தேர்ந்து எடுக்க பல வகையான உணவு வகைகள் உம்ளன.அவர்கள் விண்வெளிக்கு செல்வதற்கு 5 மாதங்களுக்கு முன்பு ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் உம்ள விண்வெளி உணவுமுறைகள் ஆய்வு மையத்திற்கு சென்று அங்குள்ள உணவு வகைகள் 20 முதல் 30 வகைகளை ருசித்து பார்த்து அவைகளின் தோற்றம்,நிறம்,மணம்,சுவை, இவற்றின் அடைப்படையில் ஒவ்வொன்றுக்கும் ஒன்று முதல் 9 முடிய ஏதாவது ஒரு மதிப்பெண்ணை வழங்குவார்கள் எந்த உணவு 6 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெறுகிறதோ அந்த உணவு அவரது மெனுவில் சேர்க்கப்படும்.உணவு ஆலோசகர் ஒருவர் அந்த விண்வெளி வீரர் தேர்வு செய்த மெனுவில் உள்ள உணவு வகைகளில் அவருக்கு தேவையான எல்ல வகை சத்துக்களும் அடங்கி உள்ளதா என சோத்தித்த பிறகே விண்வெளி வீரரின் உணவு பட்டியல் இறுதி செய்யப்படும்.
     
சில சத்துக்கள் விண் வெளியில் குறைவாக எடுத்தாலே போதுமானது. உதாரணமாக பூமியில் இருப்பதை விட விண் வெளியில் விண்வெளி வீரர்களுக்கு குறைவான இரும்பு சத்து இருந்தாலே போதுமானது ஏன் என்றால் விண் வெளியில் அவர்கள் உடம்பில் ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும்.அதிக இரும்பு சத்து அதிக ரத்த சிகப்பணுக்களை உருவாக்கிவிடும்  ஆதலால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது அதே சமயத்தில் அவர்களுக்கு கால்சியம் வைட்டமின் டி சத்துக்கள் அதிகமாக தேவைப்படும் ஏனெனில் எடை குறைவான சூழ்நிலையில் அவர்கள்ள் வலுவுடன் இருக்க இந்த சத்துக்கள் மிக அவசியம்.

விண்வெளி பயண்த்திற்கான் ஐஸ்கிரீம் தேங்காய் கொழுப்பு, திட பால்  உணவு.மற்றும் சர்க்கரை இவை அனைத்தும் உறையவைக்கபட்டு உலர்த்தப்பட்டு கிïப்களாக மிக உயர்ந்த அழுத்தில் அழுத்தப்பட்டு உருவாக்கபடுகிறது. இந்த கிïப்களுக்கு ஜெலட்டின் கோட்டிங் கொடுக்கபடுகிறது. அப்பலோ 7 விண் கலத்தில் சென்ற வீரர்கம் தான்
இத்தகைய ஐஸ் கிரீம்களை சுவைத்த வீரர்கம்.
ஒரு விண் கலத்தில் ஒரு விண்வெளி வீரருக்கு ஒருநாளைக்கு 3.8 பவுண்ட் எடையுள்ள(1 பவுண்ட் பேக்கேஜிங்கையும் சேர்த்து) உணவு வைக்கப்பட்டு இருக்கும்.

விண் கலம் தனது நீர்த்தேவையை எரிபொருள் செல்களில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் பொழுது நீரையும் சேர்த்து தயாரித்து தனது நீர்த்தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது.

திங்கள், 15 நவம்பர், 2010

வியப்பூட்டும் விண்வெளி-5 விண்வெளி வீரர்கள்

2008 நவம்பர் 14 முடிய 489 பேர் 39 நாடுகளில் இருந்து விண்வெளிக்கு பயணம் செய்து உள்ளனர். இதில் 486 பேர் லோ எர்த் ஆர் பிட் (குறைந்த புவி ஈர்ப்பு விசை உள்ள சுற்று வட்டபாதை ) மற்றும் அதற்கு அப்பால் சென்று உள்ளனர் அதில் 24 பேர் சந்திரனின் சுற்று வட்ட பாதைக்கு சென்று உள்ளனர். 2008 முடிய விண் வெளியில் அதிக நாட்கள் இருந்தவர் செரிகி கே.கிரிகலிவ்(Sergei K.Krikalev)  இவர் விண் வெளியில் 803 நாட்கள் 9 மணி நேரம் 39ள் இருந்துள்ளார். பெகி.ஏ.விட்சன்(Peggy.A.Whitson) என்ற பெண்மணி அதிக பட்சமாக  377 நாட்கள் இருந்து உள்ளார்.

Astronaut  அஸ்ட்ராநாட் என்ற சொல்  astron (நட்சத்திரம்) மற்றும்  nautes  (பயணிப்பவர்) என்ற கிரேக்க சொற்களில் இருந்து உருவாக்கபட்டது.இந்த வார்த்தை 1930 இல் நெய்ல்ஸ் ஆர் ஜோன்ஸ் என்பவர் தனது நாவலில் முதல் முதலில் பயன்படுத்தினார் நாவலின் பெயர் தி டெத் ஹெட் மீட்டார். விண்வெளி வீரர்களை அமெரிக்கா- அஸ்ட்ராநாட் (Astronaut)  என்றும் ரஷ்யா-காஸ்மோநாட் (Cosmonaut) என்றும் சீனா மிடைகோநாட் (Taikonaut)  என்றும் அழைக்கின்றனர்.


முதன் முதலில் விண்வெளிக்கு சென்றவர் ரஷ்யநாட்டை சேர்ந்த யுரி காகரின் (Yuri  Gagarin)  இவர் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி விண்வெளிக்கு சென்று பூமியை வலம் வந்தார்.விண்வெளிக்கு சென்ற முதல் பெண் வீராங்கனை ரஷ்ய நாட்டை சேர்ந்த வாலின்டைனா டெரஸ்கோவா (Valentina Tereshkova) இவர் 1963 ம் ஆண்டு ஜுன் மாதம் விண்வெளிக்கு சென்றார். விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்கர் (உலகின் 2 வது விண் வெளிவீரர்) ஆலன் செப்பர்டு (Alan Shepard)   1961 ஆண்டு மே 5 ந்தேதி விண்வெளிக்கு சென்றார்.  விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க வீராங்கனை சாலிரைடு (Sallyride) இவர் 1983 ம் ஆண்டு ஜுன் மாதம் 18-ந்தேதி விண்வெளி பயணத்தை மேற் கொண்டார். மிக சிறு வயதில் விண்வெளி பயணத்தை மேற்கொண்டவர் கெர்மான்டிட்டோவ் (GhermanTitov) வயது 25.மிக அதிகவயதில் விண்வெளி பயணத்தை மேற் கொண்டவர் ஜான் கிளன் (John Glenn) வயது 77.


     1990 டிசமபர் மாதம் ஜப்பானை சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம் 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்து டோயோ ஹைரோ அக்யாமா (Toyo Hiro Akiyoma) என்பவரை விண்வெளிக்கு அனுப்பி அங்கு நிலவும் சூழ்நிலையை விவரிக்க கோரியது ஆனல் அவர் உடல் நலம் இன்றி விரைவிலேயே திரும்பி விட்டார். முதன் முதலில் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற பயணி டென்னிஸ் டிட்டோ (Tennis Titto) இவர் 2001 ஏப்ரல் 28 அன்று ரஷ்ய விண்கலம் மூலம் சோயுஸ் டி எம் 3  மூலம் விண் வெளிக்கு பயணம் செய்தார்.
ஆண்டு தோறும் ஏப்ரல் 9  அஸ்ட்ராநாட் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர்களது தியாகம் தைரியம் கடின உழைப்பு நட்சத்திரங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இவற்றை நினைவு கூறும் வகையில்


முதன் முதலில் அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையம் 1959 இல் விண் வெளி வீரர்களை தேர்வு செய்தது. முதன் முதலில் ராணுவ ஜெட் விமானங்களை ஓட்டும் பயிற்சியும்,என்ஜினியரிங் பயிற்சியும் அவசிய தகுதிகளாக கருதப்பட்டது. முதலில் ராணுவத்தை சேர்ந்த விமானிகளுக்கு மட்டுமே விண்வெளி வீரர்களாகும் வாய்ப்பு அளிக்கபட்டது. அவர்களுக்கு 20 மாதம் பல துறைகளிலும் பயிற்சி அளிக்கபட்டது. அவர்களுடைய உயரம் 5 அடி 4 அங்குலத்தில் இருந்து 6 அடி 4 அங்குலத்திற்குள்ளாக இருக்க வேண்டும். அவர்களது பார்வைத்திறன் 20/20 என்ற அளவில் இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஜான் எப் கென்னடி விண்வெளி மையத்தில் விண்வெளி பயணத்தின் போது உயிர் இழந்த அமெரிக்க விண்வெளி வீரர்களை நினைவு கூறும் வகையில் Space mirror memorial  அமைக்கப்பட்டு ள்ளது.

சனி, 13 நவம்பர், 2010

வியப்பூட்டும் விண்வெளி-4 விண்வெளி சென்ற விலங்குகள்

விண்வெளிக்கு செல்வது தற்போது விருந்துக்கு செல்வது போல் அதிகரித்து வருகிறது.  ஆனால் 50 வருடங்களுக்கு முன்பு நிலைமை அவ்வாறு இருந்ததாக தெரியவில்லை.  எனவே மனிதன், பல வகையான விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பி வந்தான்.

 நாய், குரங்கு, முயல், எலி ஆகியவை இந்த விண்வெளி பயணத்தில் சென்று வந்த விலங்குகள் ஆகும்.  அந்த விலங்குகளில் ரஷ்யாவைச் சேர்ந்த லைகா என்னும் நாய் குறிப்பிடத்தக்கது ஆகும்.  இது 1957 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஸ்புட்னிக் 2 என்ற விண்கலத்தில் அனுப்பப்பட்டது.  ஆனால் இந்த விண்கலம் திரும்பவும் பூமிக்கு வருவதற்கான வழிமுறைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் லைகாவின் வாழ்வு அத்தோடு முடிந்து போனது.  பின்னர் 1960, ஆகஸ்ட் 9ல் ஸ்டிரெல்கா மற்றும் பெல்கா என்ற இரு நாய்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

 மே 28, 1958ல் ஏபில் என்ற ரீசஸ் இன குரங்கும், பேக்கர் என்ற ஸ்குரில் இன குரங்கும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.  பின்னர் அவை இரண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வந்தன.  இதில் அனஸ்தீசியா பிரச்சனையால் ஏபில் ஆனது சில நாட்களில் சிகிச்சையளித்தும் இறந்து போனது.  இதற்கு முன் இதே போல் முதன்முதலாக ஆல்பர்ட் என்ற ரீசஸ் இன குரங்கு 1949 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.  ஆனால் ஏபில் உடன் சென்ற பேக்கர் 27 வயது வரை வாழ்ந்து 1984ல் மறைந்தது.

 1959 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒட்வஷ்னயா மற்றும் ஸ்நெசின்கா என்னும் இரு நாய்கள் மற்றும் மர்ஃபுஷா என்ற முயல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.  இந்த முயல் லிட்டில் மார்த்தா என்றும் அழைக்கப்பட்டது.  இதில் வீரம் மிகுந்த என்ற பொருள் கொண்ட ஒட்வஷ்னயா ஐந்து முறை விண்ணில் பயணம் செய்து உள்ளது.  ஜனவரி 21, 1960ல் மிஸ். சாம் என்ற ரீசஸ் இன குரங்கு நாசா அமைப்பால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.  ஆகஸ்ட் 19, 1960ல் பயிற்சி பெற்ற இரு ரஷ்ய நாய்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று திரும்பி வந்தன.  இதில் இன்னொரு விசயம் அவைகளோடு ஒரு முயல், 40 சுண்டெலிகள், இரண்டு எலிகள், பூச்சிகள் மற்றும் தாவரங்கள் ஆகியவையும் சேர்த்து அனுப்பப்பட்டன.

 சில நாட்களுக்குப் பின்னர் நாசா அமைப்பானது ஹாம் என்ற பெயரிடப்பட்ட சிம்பன்சி இன குரங்கு விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டது.  இது மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தது ஆகும்.  மணிக்கு 1500 மைல்கள் வேகத்தில் 42 மைல்கள் உயரத்திற்கு ஹாம் சென்றது.  உடலில் நீர் இழப்பு, லேசான மயக்கம் போன்றவற்றை தவிர அது பிரச்சனையின்றி நல்ல முறையில் பூமிக்கு திரும்பியது.  1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்சு நாடு பூனையை தன்னுடைய வெரோனிக் செயற்கைகோள் உதவியால் விண்வெளிக்கு அனுப்பியது.  நாசா அமைப்பானது குரங்குகள் விண்வெளியில் நீண்ட காலம் இருக்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராய முடிவெடுத்தது.  எனவே, 1985ல் பெயரிடப்படாத இரண்டு ஸ்குரில் இன குரங்குகள் மற்றும் 2 டஜன் அல்பினோ எலிகளையும் தன்னுடைய சேலஞ்சரில் அனுப்பியது.  அவை இரண்டும் பத்திரமாக திரும்பியது.

வியப்பூட்டும் விண்வெளி-3 விண்வெளிக்கு செல்வது

(Launch Vehicle) பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு லாஞ்ச் வெகிக்கிளிலும் நிலைகள் (Stages) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராக்கெட் பகுதிகள் இருக்கும்.
விண் பயணத்தில் புவி ஈர்ப்பு விசையை மீறி பயணிப்பது என்பது ஒரு பெரிய சவால் தான் ஒரு விண்கலம் ஒரு குறிப்பிட்ட இலக்கில், குறிப்பிட்ட வேகத்தில் விண்ணில் செலுத்தப்பட வேண்டும். விண்கலம் புவீ ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு செல்வதற்கு லாஞ்ச் வெகிக்கிள் (Launch Vehicle )பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு லாஞ்ச் வெகிக்கிளிலும் நிலைகள் (Stages) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராக்கெட் பகுதிகம் இருக்கும்

முதல் நிலை ராக்கெட் விண்கலம் பூமியின் மேற்பகுதியிலிருந்து மேல் எழும்புவதற்கு பயன்படும். இதற்கு இந்த நிலைக்கு தேவைபடும் உந்து சக்தி இந்த விண்கலம், லாஞ்ச் வெகிக்கிளின் எடைகளை விட அதிகமாக இருக்க வேண்டும். ராக்கெட்டில் உள்ள பூஸ்டர்கள் எரிபொருளை எரித்து வாயுக்களை வெளியிடுவதின் மூலம் இந்த உந்து சக்தியை தயாரிக்கின்றன.
  (Propellant) எனப்படும் சிறப்பு கலவையால் இயக்கபடுகின்றன இந்த கலவையில் திட அல்லது திரவ எரிபொரும், அந்த எரிபொரும் காற்று இல்லாத விண் வெளியில் எரிவதற்கு தேவையான ஆக்ஸிசனை தரக்கூடிய ஆக்சிடைசர் (Oxidizer) இரண்டும் கலந்ததாக இருக்கும். லாக்ஸ் (Lox) அல்லது திரவ ஆக்ஸிஜன் இதுவே அடிக்கடி பயன்படுத்தப்படும் ஆக்சிடைசர் (Oxidizer)புவிஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சுற்று வட்டபாதையில் விண்கலத்தை நிலைநிறுத்த தேவையான குறைந்த அளவு வெலாசிட்டி
(Velocity)க்கு ஆர்பிட்டல் வெலாசிட்டி என்று பெயர். 190 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு விண்கலத்தை சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த தேவையான ஆர்பிட்டல் வெலாசிட்டி 8 கிலோமீட்டர்/செகன்ட். வெளிப்படும் ஒரு குழியின் மேற்புறம் பொருத்தப்படும்.பிறகு புரோபெல்லன்ட் (Propellant) என்னும் சிறப்பு கலவி பிரத்யேக பைப்கள் மூலம் நிரப்பபடும். விண் வெளியில் ஏவப்படும் சமயத்தில் ராக்கெட்டின் முதல் நிலை என்ஜின்கள் இயக்கப்படும்.அப்பொழுது ஏற்படும் உந்து சக்தி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட்டுடன் கூடிய விண்வெளி கலத்தை மேலே கொண்டு செல்லும். அடுத்த 2ம் கட்ட என்ஜின்கள் இயங்க தொடங்கும் 2 அல்லது 3 நிமிடங்கம் பறந்த பிறகு பூஸ்டர்கம் விண் கலத்தில் இருந்து பிரிந்து பாராசூட்கம் மூலம் பூமியை வந்தடைந்து விடும் பிரதான என்ஜின் தொடர்ந்து எரிந்து விண் கலத்தை குறிப்பிட்ட சுற்று வட்ட பாதையில் கொண்டு நிலைநிறுத்தும்.
ராக்கெட்டின் என்ஜின்கள் புரோபெல்லன்ட்
பொதுவாக ராக்கெட் ஏவு மையங்களில் ராக்கெட் மற்றும் கார்கோ ஒரு டிரக் அல்லது டிராக்டர் மூலம் ராக்கெட் ஏவு தளத்திற்கு எடுத்து செல்லப்படும்.அந்த ராக்கெட் ஒரு தீச்சுவாலைகள் வெளிப்படும் ஒரு குழியின் மேற்புறம் பொருத்தப்படும்.பிறகு புரோபெல்லன்ட் (Propellant) என்னும் சிறப்பு கலவி பிரத்யேக பைப்கள் மூலம் நிரப்பபடும். விண் வெளியில் ஏவப்படும் சமயத்தில் ராக்கெட்டின் முதல் நிலை என்ஜின்கள் இயக்கப்படும்.அப்பொழுது ஏற்படும் உந்து சக்தி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட்டுடன் கூடிய விண்வெளி கலத்தை மேலே கொண்டு செல்லும். அடுத்த 2ம் கட்ட என்ஜின்கள் இயங்க தொடங்கும் 2 அல்லது 3 நிமிடங்கம் பறந்த பிறகு பூஸ்டர்கம் விண் கலத்தில் இருந்து பிரிந்து பாராசூட்கம் மூலம் பூமியை வந்தடைந்து விடும் பிரதான என்ஜின் தொடர்ந்து எரிந்து விண் கலத்தை குறிப்பிட்ட சுற்று வட்ட பாதையில் கொண்டு நிலைநிறுத்தும்.

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கபட்டுள்ள எந்திரன்


 ந்திரன் இந்திய சினிமாலகில் தென்னிந்திய சினிமாவை முன்னணிக்கு நகர்த்தி சென்று உள்ளது .குறைந்த முதலீடுகளில் அதிக அளவு படங்கள் தமிழ், தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னடம் அடங்கிய தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.
1960-ல் தயாரிக்கபட்ட இந்தி படம் ghal-e-Azam   12 கோடியில் தயாரிக்கபட்டது,, ரஷ்ய சுலதான் என்ற இந்திபடம் 1983 இல் 23 கோடியில் தயாரிக்கப்பட்டது, 2006-ல் தயாரிக்கபட்ட தூம் இந்திபடம் 55 கோடியில் தயாரிக்கபட்டது. BLUE படம் 100 கோடி (20 மில்லியன் டாலர்) ரூபாயில் தயாரிக்கபட்ட படம். இந்த படத்தில் அக்சய் குமார், சஞ்சய் தத்,சாயீத் கான் , சுனில் செட்டி,காத்ரீனா கயூப். லாரா தத்தா ஆகியோர் நடித்து 2009ல் வெளி வந்தது. உலகில் அதிக பொருட் செலவில் எடுக்கபட்ட முதல் படம் ஜேம்ஸ் கோமரூனின் அவதார் படம் தான் இதன் செலவு 1200 கோடி


முதலில் பாலிவுட் நடிகர் ஷருகானுடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் எந்திரன் படம் எடுப்பதாக கூறப்பட்டது சில காரணங்களால் ஷங்கர் அதை தவிர்த்து விட்டார். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் ரா ஒன் என்ற படம் தயாரிக்கபட்டு வருகிறது இந்த படத்தை ஷருகான் தயாரித்து,நடித்து வருகிறார். இதுவும் அறிவியலை அடிப்படையாக கொண்ட படமே. இதன் தயாரிப்பு செலவும் அதிகபடியாக இருக்கும் என கூறப்படுகிறது.


தற்போது அக்டோபரில் ரீலிசாகும் எந்திரன் 200 கோடி (40 மில்லியன் டாலர்) செல்வில் எடுக்கப்பட்டு உள்ளது.இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடித்து உள்ளனர். ஷங்கர் இயக்கி உள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். சன் நெட் ஒர்க்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து உள்ளார்.


இந்த படத்திற்கான 70 சதவீத செலவு சிறந்த தொழில்நுட்பங்களுக்காகவே செலவிடப்பட்டு உள்ளது. பிரபலமான டெர்மினேட்டர், ஜுராசிக் பார்க் ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.ஹாலிவுட் படமான பேட்மேனில் பணியாற்றிய ஆடை வடிவமைபாளர் மேரி இ வோகட் இப்படத்திற்காக பணியாற்றி உள்ளார்.ஹாலிவுட் படமான மேட்ரிக்ஸ் படத்தில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர் யுங்வோ பிங் இப்படத்தில் பணியாற்றி உள்ளார்.

ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்த இந்த படத்தின் இசை ஆல்பம் உலகின் டாப் 10 வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.


பிரபல விசுவல் எபகட் நிபுணரான ஸ்டேன்லி வின்ஸ்டன் ஸ்டூடியோவில் வைத்து சிறப்பு எபக்ட் கொடுக்கபட்டு உள்ளது.ஹாலிவுட்டில் பயன்படுத்தபடும் உயரிய தொழ்ல் நுட்பங்கள் இதில் பயனபடுத்தப்பட்டு உள்ளது சண்டை பயிற்சி பீட்டர் ஹெயின்ஸ்,ஆர்ட் டைரகடர் சாபு சிரில்,ஒளிப்பதிவு ரத்தினவேலு, இந்தியாவில் தயாரிக்கபட்ட படங்களிலேயே அதிக தொழில்நுடப திறன் படைத்த படமாக இது அமையும்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

விண்வெளி என்றால் என்ன?

விண்வெளி என்றால் என்ன? : விண் வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்ட தட்ட ஒரு வெற்றிடம் நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும். இந்த பரந்த விண் வெளியில் நடசத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே.

விண்வெளியின் துவக்கம்: பூமியை சுற்றி உள்ள காற்றினால் வளி மண்டலம் உருவாக்கப்படுகிறது. பூமியில் இருந்து உயரே செல்ல செல்ல காற்றின் அடர்த்தி குறைகிறது. இந்த வளி மண்டலத்திற்கும் விண்வெளியின் வெளிப்பகுதிக்கும் ஒரு தெளிவான எல்லைக்கோடு என்பது இல்லை. ஆனால் பொதுவாக பூமியில் இருந்து 60 மைல்கள் (95 கீலோ மீட்டர்) உயரத்தில் இருந்து விண்வெளி தொடங்குவதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.வளி மண்டலத்திற்கு அடுத்து உள்ள விண்வெளி காலியாக இல்லை அங்கே சிறிது காற்று, விண்வெளி அசுத்தங்கம் மெட்ராய்ட்ஸ் (Meteoroids)    எனப்படும் விண் வெளிக்கற்கள்,பலதரப்பட்ட கதிர்வீச்சுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.ஆயிரகணக்கான விண்கலன்கள் அதாவது செயற்கை கோள்ள் இந்த பகுதிக்கு தான் செலுத்தப்படுகின்றன.

பூமியின் காந்த பகுதி  அதாவது பூமியை சுற்றி உள்ள பகுதியில் தான் காந்த சக்தி உணரப்படுகிறது. இந்த சக்தி வளி மண்டலத்தையும் தாண்டி விரவிக்கிடக்கிறது. இந்த காந்த மண்டலம் மின்னூட்டம் கொண்ட பொருட்களை விண்வெளியில் இருந்து ஈர்த்துக்கொள்கிறது. அதன் மூலம்
ஒரு கதிர் வீச்சு மண்டலம் உருவாகிறது அதற்கு வான் அலன் பெல்ட்(Van Allen belts)  என்று பெயர். பூமியின் காந்த மண்டலத்தில் மின்னூட்டம் பெற்ற பொருட்களை கட்டுபடுத்தும் விண்வெளி  பகுதிக்கு மெக்னடோஸ் பியர்ஸ் (Magnetosphere)    இது ஒரு கண்ணீர்த்துளி வடிவத்தில் இருக்கும்.அதனுடைய நுனி சந்திரனுக்கு எதிர்ப்புறம் அமைந்து இருக்கும். இந்த பகுதிக்கு அப்பால் பூமியின் காந்த மண்டலம் சூரிய சக்திக்கு கட்டு பட்டு போகிறது. இந்த தூரம் கூட பூமியின் புவீஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட தூரம் அல்ல பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் உயரம் வரைக்கும் இந்த புவீ ஈர்ப்பு விசை இருக்கும் அதனால்  விண் கலன்கள் பூமியின்  சுற்று வட்ட பாதையில் நிலை கொண்டிருக்கும்.கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தை  இன்டர் பிலானிட்டரி ஸ்பேஸ் (Interplanetary space)  என்று குறிப்பிடுகிறார்கள்.

சூரியனின் ஈர்ப்பு விசை கிரகங்களின் இயக்கத்தை கட்டுபடுத்துகிறது. அதனால் தான் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகங்களுக்கு இடையே உள்ள தூரமும் சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிக அளவு இருக்கும் உதாரணமாக பூமி சூரியனில் இருந்து சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சுற்றுகிறது. வீனஸ் கிரகம் 110 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சூரியனை சுற்றுகிறது.

இந்த வீனஸ் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் போது  பூமிக்கும் வீனஸ் கிரகத்திற்கும் இடையே உள்ள தூரம் 40 மில்லியன் கிலோமீட்டர் . இந்த தூரம் பூமிக்கும் சந்திரனுக்கும் உம்ள தூரத்தை போன்று 100 மடங்கு அதிகமானது.

நட்சத்திரங்களுக்கு இடையே உள்ளதூரத்தை இண்டர் ஸ்ட்ல்லார் ஸ்பேஸ் (Interstellar space)  என குறிப்பிடுகிறார்கள் ஆனால் விண்வெளி ஆய்வாளர்கள் இந்த தூரத்தை கிலோமீட்டர் தூரத்தில் குறிப்பிடுவது இல்லை அதற்கு பதில் ஒளி ஆண்டுகளாக குறிப்பிடுகிறார்கள். (ஒரு ஓளி ஆண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரமே ஒளி ஆண்டு எனப்படுகிறது.) ஒளி ஒரு வினாடியில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 792 கிலோ மீட்டர் பயணிக்கிறது. சூரியனுக்கு மிக அருகில் உம்ள நடசத்திரத்தின் பெயர் பிராக்சிமா சென்டவுரி (Proxima Centauri)  இது சூரியனில் இருந்து 4.2 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது அதாவது 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நட்சத்திரங்களுக்கு இடையே பல தரப்பட்ட வாயுக்கள் மெல்லிய மேகங்கள் தப்பிசென்ற விண் கற்கள் மிக அதிகமான குளிர் தன்மையுடைய தூசுக்கள் முதலியவை மிதக்கின்றன. மேலும் பலப்பொருட்கள் இப்பகுதியில் கண்டறிப்படாமல் உள்ளன.
                                                                                                
                                                                                                            தொடரும்....

திங்கள், 6 செப்டம்பர், 2010

அதிகமான விளம்பர படங்களில் பெண்கள் தோன்றுவது ஏன்?

ம்மை சுற்றிப் பார்த்தால் நாம் ஒரு விளம்பர உலகில் இருப்பதை நன்கு உணரலாம். ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதில் விளம்பரம் பெரும் பங்கு வகிக்கிறது. தற்பொழுது விளம்பர உலகம் சற்றே மாறி உள்ளது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தங்களுடைய நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதில் அவை பல்முனை போட்டிகளை சந்தித்து வருகிறது. விளம்பர நிறுவனங்கள் புதிய யுக்திகளை கொண்டு புதிய தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு இன்டர்நெட் என்னும் சாதனத்தை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது.
பெரும்பாலான விளம்பரங்களில் பெண் விளம்பர மாடல்கள் தோன்றுவதை நாம் கவனித்திருக்கலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 60 சதவிகித விளம்பரங்களில் பெண்களே அதிகம் தோன்றுகின்றனர் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. விளம்பர நிறுவனங்கள் ஆண் நடிகர்களை கொண்டு ஒரு தயாரிப்பை சந்தைப்படுத்துவதைக் காட்டிலும் பெண் நடிகர்களை கொண்டு அந்த தயாரிப்பை சந்தைப்படுத்தும் பொழுது அது வெகு விரைவாக வாடிக்கையாளர்களை சென்று சேர்கிறது என்று கருதுகின்றன. ஆண்களின் சவர கிரீம்கள், உள்ளாடைகள் ஆகிய தயாரிப்புகளின் விளம்பரங்களில் கூட அதிகமாக பெண்களே இடம் பிடித்து உள்ளனர். உளவியல் ரீதியாக இவை அதிகமான ஆண் வாடிக்கையாளர்களை கவரும் மற்றும் தங்களின் விற்பனையை அதிகரிக்கும் என்ற அடிப்படையில் விளம்பர நிறுவனங்கள் இவ்வகை முயற்சிகளை மேற்கொள்கின்றன.


ஒரு ஆராய்ச்சியானது 55 சதவிகித ஆண்கள் இயல்பிலேயே பெண்களிடம் பேச மற்றும் பழக விரும்பும் எண்ணம் கொண்டவர்கள் என்று தெரிவிக்கிறது. அவர்கள் ஆண்களிடம் பேசுவதைக் காட்டிலும், அதிகமாக பெண்களிடம் பேசுவதையே விரும்புகின்றனர் என்பதை விளம்பர நிறுவனங்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது. எனவே பெண் நடிகர்களை தங்களின் விளம்பரத்தில் நடிக்க வைக்கும் பொழுது அவை எளிதாக தங்களின் தயாரிப்புகளை பெரும்பாலான ஆண்களிடம் சென்று சேர்க்கிறது.


ஆண்களுக்கான தயாரிப்புகளான வாசனை திரவியங்கள், சவர கிரீம்கள், சவரத்திற்கு பின் பூசும் கிரீம்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றின் விளம்பரங்களுக்கும் அதிகமாக பெண்களே நடிக்க வைக்கப்படுகின்றனர். இருப்பினும், விளம்பர நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது நாங்கள் அவர்களை தவறாக பயன்படுத்தவில்லை என்று கூறுகிறது. உதாரணமாக, ஆக்ஸ் எனப்படும் வாசனை திரவியம் பற்றிய விளம்பரங்களில் பெண் நடிகைகள் ஆண் நடிகர்களுடன் தோன்றுகின்றனர். இந்த தயாரிப்பினை பயன்படுத்தும் பொழுது அது அதிகமான பெண்களை கவரும் தன்மை வாய்ந்தது என்பதை எடுத்து காட்டுவதற்காகவே இவ்வாறு விளம்பரப்படுத்தப்படுகிறது என்கின்றனர். பாஸ் ஹியுகோ மற்றும் வைல்ட் ஸ்டோன் ஆகிய விளம்பரங்களில் மனைவிமார்கள், பக்கத்து வீட்டு பெண்கள் உள்பட கவரப்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சந்தையில் தங்களின் தயாரிப்புகளுக்கு அதிகமான தேவையிருப்பதை வளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகும்

.ஆனால் பெண்கள்- ஆண்களின் அடி மனது ஆசைகளையும், தாழ்வு மனப்பான்மையையும் அடிப்படையாக கொண்டே அனைத்து விளம்பரங்களும் அமைகின்றன.
மற்றொரு காரணமும் இதற்கு சொல்லப்படுகிறது. வீட்டுக்குத் தேவையான பொருள்களை ஆண்களை காட்டிலும் பெரும்பாலான பெண்களே கடைகளில் சென்று வாங்கி வருகின்றனர். எனவே அவர்களிடம் தங்களின் தயாரிப்புகளை எளிதாக எடுத்துச் சொல்வதற்கு பெண் நடிகைகளே உகந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு குடும்பத்தில் முக்கிய உறுப்பினரான பெண்களிடம் அவர்கள் சம்பந்தப்பட்ட உடல் ஆரோக்கியம் போன்ற விசயங்களுக்கு உடற்பயிற்சி செய்வது போல் பெண் நடிகைகள் விளம்பரங்களில் தோன்றுகின்றனர். இவை அவர்களை பெரிதும் கவர்கிறது. தங்களின் குடும்பத்தினை பேணி பாதுகாப்பதற்கு தங்களை கவனிப்பதும் அவசியம் என்பதை எளிதாக எடுத்துச் சொல்லப்படுகிறது. விளம்பர தயாரிப்பாளர்கள், தங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலோ அல்லது விளம்பர பலகைகளிலோ வரும் பொழுது அவை யாரை சென்று சேர்கிறது என்பதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். இதனாலேயே சமையல் எண்ணெய், அழகு சாதன பொருட்கள், பெண்களின் ஆரோக்கியம் ஆகிய விளம்பரங்களில் பெண் நடிகைகளே அதிகம் தோன்றுகின்றனர்.

தற்பொழுது கணினி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு விளம்பரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இவை நகர மற்றும் கிராம மக்கள் என பல்வேறு தரப்பு மக்களை எளிதாக சென்று சேர்வதால் தொலைக்காட்சியினை விட அதிகமாக விளம்பரங்கள் இணைய தளத்தில் வெளிவர துவங்கி உள்ளன. மேலும் குறைந்த அளவு கொண்டவையாக இருந்தாலும் அவை பார்ப்பவரின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனாலேயே பிகினி பெண்கள், சூப்பர் மாடல்கள் ஆகியோர் பயன்படுத்தப்படுகின்றனர்.

சனி, 4 செப்டம்பர், 2010

வியப்பூட்டும் விண்வெளி

.நா சபையின் 62 வது பொது சபை கூட்டம் 2009 ஆம் ஆண்டை உலக வானியல் ஆண்டாக அறிவித்து உள்ளது. மக்களிடையே வானியல் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிக அளவு மக்கம் வான்வெளி பற்றி அறிந்து கொள்ளவும் இந்த ஆண்டை வானியல் ஆண்டாக அறிவித்து உள்ளது.


பண்ணாட்டு வானியல் மையமும் (IAU INTERNATIONAL ASTRONOMICAL UNION) யுனஸ்கோ நிறுவனமும் இதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளன.
புகழ் பெற்ற வானியல் நிபுணர் கலீலியோ கலிலி விண்வெளி ஆய்வுக்காக டெலஸ் கோப் மூலம் ஆய்வை தொடங்கி 400 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்து உள்ளது. அவருடைய ஆய்வு ஜுபிடர் கிரகத்தின் 4 முக்கியமான துணைக்கோள்கள்,சந்திரனில் உள்ள மலைகள் மற்றும் எரி மலைகள்

சூரிய புள்ளிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ள வழிவகை செய்தது.

கலீலியோ பயன்படுத்திய டெலஸ்கோப் தான் வானியலின்

இந்த 400 ஆண்டுகால வளர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய நிலையில் இந்த அண்டத்தையும், விண்வெளியையும் 24 மணி நேரமும் பார்த்து ஆராய

வானியல் துறை வளர்ச்சி அடைந்து உள்ளது. கலீலியோ பிறந்த நாடான இத்தாலி ஐ.நா சபையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தது.


மனிதன்,பூமி நிலவு,கிரகங்கள், சூரியன், மற்றும் நட்சத்திரங்கள், பால் வெளி இவை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வத்திற்கு மனித சமுதாயம் எடுத்து கொண்ட முயற்சியே விண்வெளி பயணங்கள். ஆள் இல்லாத, ஆளோடு கூடிய விண்கலங்களை பூமியின் எல்லைகளுக்கு அப்பால் அனுப்பி இந்த பிரபஞ்சம் குறித்த பல உபயோகமான தகவல்களை பெறுவதற்கான ஒரு முயற்சியாக இது அமைந்து உள்ளது.



இந்த விண்வெளி பயணம் நமது பூமிக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதற்காகவும் சூரியன் கிரகங்கள், நட்சத்திரங்கள் எப்படி தோன்றின என்பதை ஆய்வு செய்வதற்காகவும் இந்த பூமிக்கு அப்பால் உயிரினங்கள், மற்றும் நம்மை போன்ற மனித சமுதாயங்கள் இருக்கின்றனவா என அறிந்து கொள்வதற்காகவும் மேற்கொள்ளபடுகின்றன.

விண்வெளி காலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. ஏனெனில் அன்றுதான் சோவியத் ரஷ்யா பூமியை சுற்றி வருவதற்காக தனது முதல் செயற்கை கோளான ஸ்புட்னிக்-1யை விண் வெளியில் ஏவியது.