2008 நவம்பர் 14 முடிய 489 பேர் 39 நாடுகளில் இருந்து விண்வெளிக்கு பயணம் செய்து உள்ளனர். இதில் 486 பேர் லோ எர்த் ஆர் பிட் (குறைந்த புவி ஈர்ப்பு விசை உள்ள சுற்று வட்டபாதை ) மற்றும் அதற்கு அப்பால் சென்று உள்ளனர் அதில் 24 பேர் சந்திரனின் சுற்று வட்ட பாதைக்கு சென்று உள்ளனர். 2008 முடிய விண் வெளியில் அதிக நாட்கள் இருந்தவர் செரிகி கே.கிரிகலிவ்(Sergei K.Krikalev) இவர் விண் வெளியில் 803 நாட்கள் 9 மணி நேரம் 39ள் இருந்துள்ளார். பெகி.ஏ.விட்சன்(Peggy.A.Whitson) என்ற பெண்மணி அதிக பட்சமாக 377 நாட்கள் இருந்து உள்ளார்.
Astronaut அஸ்ட்ராநாட் என்ற சொல் astron (நட்சத்திரம்) மற்றும் nautes (பயணிப்பவர்) என்ற கிரேக்க சொற்களில் இருந்து உருவாக்கபட்டது.இந்த வார்த்தை 1930 இல் நெய்ல்ஸ் ஆர் ஜோன்ஸ் என்பவர் தனது நாவலில் முதல் முதலில் பயன்படுத்தினார் நாவலின் பெயர் தி டெத் ஹெட் மீட்டார். விண்வெளி வீரர்களை அமெரிக்கா- அஸ்ட்ராநாட் (Astronaut) என்றும் ரஷ்யா-காஸ்மோநாட் (Cosmonaut) என்றும் சீனா மிடைகோநாட் (Taikonaut) என்றும் அழைக்கின்றனர்.
முதன் முதலில் விண்வெளிக்கு சென்றவர் ரஷ்யநாட்டை சேர்ந்த யுரி காகரின் (Yuri Gagarin) இவர் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி விண்வெளிக்கு சென்று பூமியை வலம் வந்தார்.விண்வெளிக்கு சென்ற முதல் பெண் வீராங்கனை ரஷ்ய நாட்டை சேர்ந்த வாலின்டைனா டெரஸ்கோவா (Valentina Tereshkova) இவர் 1963 ம் ஆண்டு ஜுன் மாதம் விண்வெளிக்கு சென்றார். விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்கர் (உலகின் 2 வது விண் வெளிவீரர்) ஆலன் செப்பர்டு (Alan Shepard) 1961 ஆண்டு மே 5 ந்தேதி விண்வெளிக்கு சென்றார். விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க வீராங்கனை சாலிரைடு (Sallyride) இவர் 1983 ம் ஆண்டு ஜுன் மாதம் 18-ந்தேதி விண்வெளி பயணத்தை மேற் கொண்டார். மிக சிறு வயதில் விண்வெளி பயணத்தை மேற்கொண்டவர் கெர்மான்டிட்டோவ் (GhermanTitov) வயது 25.மிக அதிகவயதில் விண்வெளி பயணத்தை மேற் கொண்டவர் ஜான் கிளன் (John Glenn) வயது 77.
1990 டிசமபர் மாதம் ஜப்பானை சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம் 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்து டோயோ ஹைரோ அக்யாமா (Toyo Hiro Akiyoma) என்பவரை விண்வெளிக்கு அனுப்பி அங்கு நிலவும் சூழ்நிலையை விவரிக்க கோரியது ஆனல் அவர் உடல் நலம் இன்றி விரைவிலேயே திரும்பி விட்டார். முதன் முதலில் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற பயணி டென்னிஸ் டிட்டோ (Tennis Titto) இவர் 2001 ஏப்ரல் 28 அன்று ரஷ்ய விண்கலம் மூலம் சோயுஸ் டி எம் 3 மூலம் விண் வெளிக்கு பயணம் செய்தார்.
ஆண்டு தோறும் ஏப்ரல் 9 அஸ்ட்ராநாட் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர்களது தியாகம் தைரியம் கடின உழைப்பு நட்சத்திரங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இவற்றை நினைவு கூறும் வகையில்
முதன் முதலில் அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையம் 1959 இல் விண் வெளி வீரர்களை தேர்வு செய்தது. முதன் முதலில் ராணுவ ஜெட் விமானங்களை ஓட்டும் பயிற்சியும்,என்ஜினியரிங் பயிற்சியும் அவசிய தகுதிகளாக கருதப்பட்டது. முதலில் ராணுவத்தை சேர்ந்த விமானிகளுக்கு மட்டுமே விண்வெளி வீரர்களாகும் வாய்ப்பு அளிக்கபட்டது. அவர்களுக்கு 20 மாதம் பல துறைகளிலும் பயிற்சி அளிக்கபட்டது. அவர்களுடைய உயரம் 5 அடி 4 அங்குலத்தில் இருந்து 6 அடி 4 அங்குலத்திற்குள்ளாக இருக்க வேண்டும். அவர்களது பார்வைத்திறன் 20/20 என்ற அளவில் இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஜான் எப் கென்னடி விண்வெளி மையத்தில் விண்வெளி பயணத்தின் போது உயிர் இழந்த அமெரிக்க விண்வெளி வீரர்களை நினைவு கூறும் வகையில் Space mirror memorial அமைக்கப்பட்டு ள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக