செவ்வாய், 28 செப்டம்பர், 2010
ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கபட்டுள்ள எந்திரன்
எந்திரன் இந்திய சினிமாலகில் தென்னிந்திய சினிமாவை முன்னணிக்கு நகர்த்தி சென்று உள்ளது .குறைந்த முதலீடுகளில் அதிக அளவு படங்கள் தமிழ், தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னடம் அடங்கிய தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.
1960-ல் தயாரிக்கபட்ட இந்தி படம் ghal-e-Azam 12 கோடியில் தயாரிக்கபட்டது,, ரஷ்ய சுலதான் என்ற இந்திபடம் 1983 இல் 23 கோடியில் தயாரிக்கப்பட்டது, 2006-ல் தயாரிக்கபட்ட தூம் இந்திபடம் 55 கோடியில் தயாரிக்கபட்டது. BLUE படம் 100 கோடி (20 மில்லியன் டாலர்) ரூபாயில் தயாரிக்கபட்ட படம். இந்த படத்தில் அக்சய் குமார், சஞ்சய் தத்,சாயீத் கான் , சுனில் செட்டி,காத்ரீனா கயூப். லாரா தத்தா ஆகியோர் நடித்து 2009ல் வெளி வந்தது. உலகில் அதிக பொருட் செலவில் எடுக்கபட்ட முதல் படம் ஜேம்ஸ் கோமரூனின் அவதார் படம் தான் இதன் செலவு 1200 கோடி
முதலில் பாலிவுட் நடிகர் ஷருகானுடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் எந்திரன் படம் எடுப்பதாக கூறப்பட்டது சில காரணங்களால் ஷங்கர் அதை தவிர்த்து விட்டார். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் ரா ஒன் என்ற படம் தயாரிக்கபட்டு வருகிறது இந்த படத்தை ஷருகான் தயாரித்து,நடித்து வருகிறார். இதுவும் அறிவியலை அடிப்படையாக கொண்ட படமே. இதன் தயாரிப்பு செலவும் அதிகபடியாக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது அக்டோபரில் ரீலிசாகும் எந்திரன் 200 கோடி (40 மில்லியன் டாலர்) செல்வில் எடுக்கப்பட்டு உள்ளது.இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடித்து உள்ளனர். ஷங்கர் இயக்கி உள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். சன் நெட் ஒர்க்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து உள்ளார்.
இந்த படத்திற்கான 70 சதவீத செலவு சிறந்த தொழில்நுட்பங்களுக்காகவே செலவிடப்பட்டு உள்ளது. பிரபலமான டெர்மினேட்டர், ஜுராசிக் பார்க் ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.ஹாலிவுட் படமான பேட்மேனில் பணியாற்றிய ஆடை வடிவமைபாளர் மேரி இ வோகட் இப்படத்திற்காக பணியாற்றி உள்ளார்.ஹாலிவுட் படமான மேட்ரிக்ஸ் படத்தில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர் யுங்வோ பிங் இப்படத்தில் பணியாற்றி உள்ளார்.
ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்த இந்த படத்தின் இசை ஆல்பம் உலகின் டாப் 10 வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.
பிரபல விசுவல் எபகட் நிபுணரான ஸ்டேன்லி வின்ஸ்டன் ஸ்டூடியோவில் வைத்து சிறப்பு எபக்ட் கொடுக்கபட்டு உள்ளது.ஹாலிவுட்டில் பயன்படுத்தபடும் உயரிய தொழ்ல் நுட்பங்கள் இதில் பயனபடுத்தப்பட்டு உள்ளது சண்டை பயிற்சி பீட்டர் ஹெயின்ஸ்,ஆர்ட் டைரகடர் சாபு சிரில்,ஒளிப்பதிவு ரத்தினவேலு, இந்தியாவில் தயாரிக்கபட்ட படங்களிலேயே அதிக தொழில்நுடப திறன் படைத்த படமாக இது அமையும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக