பண்ணாட்டு வானியல் மையமும் (IAU INTERNATIONAL ASTRONOMICAL UNION) யுனஸ்கோ நிறுவனமும் இதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளன.
புகழ் பெற்ற வானியல் நிபுணர் கலீலியோ கலிலி விண்வெளி ஆய்வுக்காக டெலஸ் கோப் மூலம் ஆய்வை தொடங்கி 400 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்து உள்ளது. அவருடைய ஆய்வு ஜுபிடர் கிரகத்தின் 4 முக்கியமான துணைக்கோள்கள்,சந்திரனில் உள்ள மலைகள் மற்றும் எரி மலைகள்
சூரிய புள்ளிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ள வழிவகை செய்தது.
கலீலியோ பயன்படுத்திய டெலஸ்கோப் தான் வானியலின்
இந்த 400 ஆண்டுகால வளர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய நிலையில் இந்த அண்டத்தையும், விண்வெளியையும் 24 மணி நேரமும் பார்த்து ஆராய
வானியல் துறை வளர்ச்சி அடைந்து உள்ளது. கலீலியோ பிறந்த நாடான இத்தாலி ஐ.நா சபையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தது.
மனிதன்,பூமி நிலவு,கிரகங்கள், சூரியன், மற்றும் நட்சத்திரங்கள், பால் வெளி இவை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வத்திற்கு மனித சமுதாயம் எடுத்து கொண்ட முயற்சியே விண்வெளி பயணங்கள். ஆள் இல்லாத, ஆளோடு கூடிய விண்கலங்களை பூமியின் எல்லைகளுக்கு அப்பால் அனுப்பி இந்த பிரபஞ்சம் குறித்த பல உபயோகமான தகவல்களை பெறுவதற்கான ஒரு முயற்சியாக இது அமைந்து உள்ளது.
இந்த விண்வெளி பயணம் நமது பூமிக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதற்காகவும் சூரியன் கிரகங்கள், நட்சத்திரங்கள் எப்படி தோன்றின என்பதை ஆய்வு செய்வதற்காகவும் இந்த பூமிக்கு அப்பால் உயிரினங்கள், மற்றும் நம்மை போன்ற மனித சமுதாயங்கள் இருக்கின்றனவா என அறிந்து கொள்வதற்காகவும் மேற்கொள்ளபடுகின்றன.விண்வெளி காலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. ஏனெனில் அன்றுதான் சோவியத் ரஷ்யா பூமியை சுற்றி வருவதற்காக தனது முதல் செயற்கை கோளான ஸ்புட்னிக்-1யை விண் வெளியில் ஏவியது.
1 கருத்து:
excelent articile...
கருத்துரையிடுக