செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கபட்டுள்ள எந்திரன்


 ந்திரன் இந்திய சினிமாலகில் தென்னிந்திய சினிமாவை முன்னணிக்கு நகர்த்தி சென்று உள்ளது .குறைந்த முதலீடுகளில் அதிக அளவு படங்கள் தமிழ், தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னடம் அடங்கிய தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.
1960-ல் தயாரிக்கபட்ட இந்தி படம் ghal-e-Azam   12 கோடியில் தயாரிக்கபட்டது,, ரஷ்ய சுலதான் என்ற இந்திபடம் 1983 இல் 23 கோடியில் தயாரிக்கப்பட்டது, 2006-ல் தயாரிக்கபட்ட தூம் இந்திபடம் 55 கோடியில் தயாரிக்கபட்டது. BLUE படம் 100 கோடி (20 மில்லியன் டாலர்) ரூபாயில் தயாரிக்கபட்ட படம். இந்த படத்தில் அக்சய் குமார், சஞ்சய் தத்,சாயீத் கான் , சுனில் செட்டி,காத்ரீனா கயூப். லாரா தத்தா ஆகியோர் நடித்து 2009ல் வெளி வந்தது. உலகில் அதிக பொருட் செலவில் எடுக்கபட்ட முதல் படம் ஜேம்ஸ் கோமரூனின் அவதார் படம் தான் இதன் செலவு 1200 கோடி


முதலில் பாலிவுட் நடிகர் ஷருகானுடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் எந்திரன் படம் எடுப்பதாக கூறப்பட்டது சில காரணங்களால் ஷங்கர் அதை தவிர்த்து விட்டார். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் ரா ஒன் என்ற படம் தயாரிக்கபட்டு வருகிறது இந்த படத்தை ஷருகான் தயாரித்து,நடித்து வருகிறார். இதுவும் அறிவியலை அடிப்படையாக கொண்ட படமே. இதன் தயாரிப்பு செலவும் அதிகபடியாக இருக்கும் என கூறப்படுகிறது.


தற்போது அக்டோபரில் ரீலிசாகும் எந்திரன் 200 கோடி (40 மில்லியன் டாலர்) செல்வில் எடுக்கப்பட்டு உள்ளது.இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடித்து உள்ளனர். ஷங்கர் இயக்கி உள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். சன் நெட் ஒர்க்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து உள்ளார்.


இந்த படத்திற்கான 70 சதவீத செலவு சிறந்த தொழில்நுட்பங்களுக்காகவே செலவிடப்பட்டு உள்ளது. பிரபலமான டெர்மினேட்டர், ஜுராசிக் பார்க் ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.ஹாலிவுட் படமான பேட்மேனில் பணியாற்றிய ஆடை வடிவமைபாளர் மேரி இ வோகட் இப்படத்திற்காக பணியாற்றி உள்ளார்.ஹாலிவுட் படமான மேட்ரிக்ஸ் படத்தில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர் யுங்வோ பிங் இப்படத்தில் பணியாற்றி உள்ளார்.

ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்த இந்த படத்தின் இசை ஆல்பம் உலகின் டாப் 10 வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.


பிரபல விசுவல் எபகட் நிபுணரான ஸ்டேன்லி வின்ஸ்டன் ஸ்டூடியோவில் வைத்து சிறப்பு எபக்ட் கொடுக்கபட்டு உள்ளது.ஹாலிவுட்டில் பயன்படுத்தபடும் உயரிய தொழ்ல் நுட்பங்கள் இதில் பயனபடுத்தப்பட்டு உள்ளது சண்டை பயிற்சி பீட்டர் ஹெயின்ஸ்,ஆர்ட் டைரகடர் சாபு சிரில்,ஒளிப்பதிவு ரத்தினவேலு, இந்தியாவில் தயாரிக்கபட்ட படங்களிலேயே அதிக தொழில்நுடப திறன் படைத்த படமாக இது அமையும்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

விண்வெளி என்றால் என்ன?

விண்வெளி என்றால் என்ன? : விண் வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்ட தட்ட ஒரு வெற்றிடம் நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும். இந்த பரந்த விண் வெளியில் நடசத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே.

விண்வெளியின் துவக்கம்: பூமியை சுற்றி உள்ள காற்றினால் வளி மண்டலம் உருவாக்கப்படுகிறது. பூமியில் இருந்து உயரே செல்ல செல்ல காற்றின் அடர்த்தி குறைகிறது. இந்த வளி மண்டலத்திற்கும் விண்வெளியின் வெளிப்பகுதிக்கும் ஒரு தெளிவான எல்லைக்கோடு என்பது இல்லை. ஆனால் பொதுவாக பூமியில் இருந்து 60 மைல்கள் (95 கீலோ மீட்டர்) உயரத்தில் இருந்து விண்வெளி தொடங்குவதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.வளி மண்டலத்திற்கு அடுத்து உள்ள விண்வெளி காலியாக இல்லை அங்கே சிறிது காற்று, விண்வெளி அசுத்தங்கம் மெட்ராய்ட்ஸ் (Meteoroids)    எனப்படும் விண் வெளிக்கற்கள்,பலதரப்பட்ட கதிர்வீச்சுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.ஆயிரகணக்கான விண்கலன்கள் அதாவது செயற்கை கோள்ள் இந்த பகுதிக்கு தான் செலுத்தப்படுகின்றன.

பூமியின் காந்த பகுதி  அதாவது பூமியை சுற்றி உள்ள பகுதியில் தான் காந்த சக்தி உணரப்படுகிறது. இந்த சக்தி வளி மண்டலத்தையும் தாண்டி விரவிக்கிடக்கிறது. இந்த காந்த மண்டலம் மின்னூட்டம் கொண்ட பொருட்களை விண்வெளியில் இருந்து ஈர்த்துக்கொள்கிறது. அதன் மூலம்
ஒரு கதிர் வீச்சு மண்டலம் உருவாகிறது அதற்கு வான் அலன் பெல்ட்(Van Allen belts)  என்று பெயர். பூமியின் காந்த மண்டலத்தில் மின்னூட்டம் பெற்ற பொருட்களை கட்டுபடுத்தும் விண்வெளி  பகுதிக்கு மெக்னடோஸ் பியர்ஸ் (Magnetosphere)    இது ஒரு கண்ணீர்த்துளி வடிவத்தில் இருக்கும்.அதனுடைய நுனி சந்திரனுக்கு எதிர்ப்புறம் அமைந்து இருக்கும். இந்த பகுதிக்கு அப்பால் பூமியின் காந்த மண்டலம் சூரிய சக்திக்கு கட்டு பட்டு போகிறது. இந்த தூரம் கூட பூமியின் புவீஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட தூரம் அல்ல பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் உயரம் வரைக்கும் இந்த புவீ ஈர்ப்பு விசை இருக்கும் அதனால்  விண் கலன்கள் பூமியின்  சுற்று வட்ட பாதையில் நிலை கொண்டிருக்கும்.கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தை  இன்டர் பிலானிட்டரி ஸ்பேஸ் (Interplanetary space)  என்று குறிப்பிடுகிறார்கள்.

சூரியனின் ஈர்ப்பு விசை கிரகங்களின் இயக்கத்தை கட்டுபடுத்துகிறது. அதனால் தான் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகங்களுக்கு இடையே உள்ள தூரமும் சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிக அளவு இருக்கும் உதாரணமாக பூமி சூரியனில் இருந்து சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சுற்றுகிறது. வீனஸ் கிரகம் 110 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சூரியனை சுற்றுகிறது.

இந்த வீனஸ் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் போது  பூமிக்கும் வீனஸ் கிரகத்திற்கும் இடையே உள்ள தூரம் 40 மில்லியன் கிலோமீட்டர் . இந்த தூரம் பூமிக்கும் சந்திரனுக்கும் உம்ள தூரத்தை போன்று 100 மடங்கு அதிகமானது.

நட்சத்திரங்களுக்கு இடையே உள்ளதூரத்தை இண்டர் ஸ்ட்ல்லார் ஸ்பேஸ் (Interstellar space)  என குறிப்பிடுகிறார்கள் ஆனால் விண்வெளி ஆய்வாளர்கள் இந்த தூரத்தை கிலோமீட்டர் தூரத்தில் குறிப்பிடுவது இல்லை அதற்கு பதில் ஒளி ஆண்டுகளாக குறிப்பிடுகிறார்கள். (ஒரு ஓளி ஆண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரமே ஒளி ஆண்டு எனப்படுகிறது.) ஒளி ஒரு வினாடியில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 792 கிலோ மீட்டர் பயணிக்கிறது. சூரியனுக்கு மிக அருகில் உம்ள நடசத்திரத்தின் பெயர் பிராக்சிமா சென்டவுரி (Proxima Centauri)  இது சூரியனில் இருந்து 4.2 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது அதாவது 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நட்சத்திரங்களுக்கு இடையே பல தரப்பட்ட வாயுக்கள் மெல்லிய மேகங்கள் தப்பிசென்ற விண் கற்கள் மிக அதிகமான குளிர் தன்மையுடைய தூசுக்கள் முதலியவை மிதக்கின்றன. மேலும் பலப்பொருட்கள் இப்பகுதியில் கண்டறிப்படாமல் உள்ளன.
                                                                                                
                                                                                                            தொடரும்....

திங்கள், 6 செப்டம்பர், 2010

அதிகமான விளம்பர படங்களில் பெண்கள் தோன்றுவது ஏன்?

ம்மை சுற்றிப் பார்த்தால் நாம் ஒரு விளம்பர உலகில் இருப்பதை நன்கு உணரலாம். ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதில் விளம்பரம் பெரும் பங்கு வகிக்கிறது. தற்பொழுது விளம்பர உலகம் சற்றே மாறி உள்ளது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தங்களுடைய நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதில் அவை பல்முனை போட்டிகளை சந்தித்து வருகிறது. விளம்பர நிறுவனங்கள் புதிய யுக்திகளை கொண்டு புதிய தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு இன்டர்நெட் என்னும் சாதனத்தை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது.
பெரும்பாலான விளம்பரங்களில் பெண் விளம்பர மாடல்கள் தோன்றுவதை நாம் கவனித்திருக்கலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 60 சதவிகித விளம்பரங்களில் பெண்களே அதிகம் தோன்றுகின்றனர் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. விளம்பர நிறுவனங்கள் ஆண் நடிகர்களை கொண்டு ஒரு தயாரிப்பை சந்தைப்படுத்துவதைக் காட்டிலும் பெண் நடிகர்களை கொண்டு அந்த தயாரிப்பை சந்தைப்படுத்தும் பொழுது அது வெகு விரைவாக வாடிக்கையாளர்களை சென்று சேர்கிறது என்று கருதுகின்றன. ஆண்களின் சவர கிரீம்கள், உள்ளாடைகள் ஆகிய தயாரிப்புகளின் விளம்பரங்களில் கூட அதிகமாக பெண்களே இடம் பிடித்து உள்ளனர். உளவியல் ரீதியாக இவை அதிகமான ஆண் வாடிக்கையாளர்களை கவரும் மற்றும் தங்களின் விற்பனையை அதிகரிக்கும் என்ற அடிப்படையில் விளம்பர நிறுவனங்கள் இவ்வகை முயற்சிகளை மேற்கொள்கின்றன.


ஒரு ஆராய்ச்சியானது 55 சதவிகித ஆண்கள் இயல்பிலேயே பெண்களிடம் பேச மற்றும் பழக விரும்பும் எண்ணம் கொண்டவர்கள் என்று தெரிவிக்கிறது. அவர்கள் ஆண்களிடம் பேசுவதைக் காட்டிலும், அதிகமாக பெண்களிடம் பேசுவதையே விரும்புகின்றனர் என்பதை விளம்பர நிறுவனங்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது. எனவே பெண் நடிகர்களை தங்களின் விளம்பரத்தில் நடிக்க வைக்கும் பொழுது அவை எளிதாக தங்களின் தயாரிப்புகளை பெரும்பாலான ஆண்களிடம் சென்று சேர்க்கிறது.


ஆண்களுக்கான தயாரிப்புகளான வாசனை திரவியங்கள், சவர கிரீம்கள், சவரத்திற்கு பின் பூசும் கிரீம்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றின் விளம்பரங்களுக்கும் அதிகமாக பெண்களே நடிக்க வைக்கப்படுகின்றனர். இருப்பினும், விளம்பர நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது நாங்கள் அவர்களை தவறாக பயன்படுத்தவில்லை என்று கூறுகிறது. உதாரணமாக, ஆக்ஸ் எனப்படும் வாசனை திரவியம் பற்றிய விளம்பரங்களில் பெண் நடிகைகள் ஆண் நடிகர்களுடன் தோன்றுகின்றனர். இந்த தயாரிப்பினை பயன்படுத்தும் பொழுது அது அதிகமான பெண்களை கவரும் தன்மை வாய்ந்தது என்பதை எடுத்து காட்டுவதற்காகவே இவ்வாறு விளம்பரப்படுத்தப்படுகிறது என்கின்றனர். பாஸ் ஹியுகோ மற்றும் வைல்ட் ஸ்டோன் ஆகிய விளம்பரங்களில் மனைவிமார்கள், பக்கத்து வீட்டு பெண்கள் உள்பட கவரப்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சந்தையில் தங்களின் தயாரிப்புகளுக்கு அதிகமான தேவையிருப்பதை வளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகும்

.ஆனால் பெண்கள்- ஆண்களின் அடி மனது ஆசைகளையும், தாழ்வு மனப்பான்மையையும் அடிப்படையாக கொண்டே அனைத்து விளம்பரங்களும் அமைகின்றன.
மற்றொரு காரணமும் இதற்கு சொல்லப்படுகிறது. வீட்டுக்குத் தேவையான பொருள்களை ஆண்களை காட்டிலும் பெரும்பாலான பெண்களே கடைகளில் சென்று வாங்கி வருகின்றனர். எனவே அவர்களிடம் தங்களின் தயாரிப்புகளை எளிதாக எடுத்துச் சொல்வதற்கு பெண் நடிகைகளே உகந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு குடும்பத்தில் முக்கிய உறுப்பினரான பெண்களிடம் அவர்கள் சம்பந்தப்பட்ட உடல் ஆரோக்கியம் போன்ற விசயங்களுக்கு உடற்பயிற்சி செய்வது போல் பெண் நடிகைகள் விளம்பரங்களில் தோன்றுகின்றனர். இவை அவர்களை பெரிதும் கவர்கிறது. தங்களின் குடும்பத்தினை பேணி பாதுகாப்பதற்கு தங்களை கவனிப்பதும் அவசியம் என்பதை எளிதாக எடுத்துச் சொல்லப்படுகிறது. விளம்பர தயாரிப்பாளர்கள், தங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலோ அல்லது விளம்பர பலகைகளிலோ வரும் பொழுது அவை யாரை சென்று சேர்கிறது என்பதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். இதனாலேயே சமையல் எண்ணெய், அழகு சாதன பொருட்கள், பெண்களின் ஆரோக்கியம் ஆகிய விளம்பரங்களில் பெண் நடிகைகளே அதிகம் தோன்றுகின்றனர்.

தற்பொழுது கணினி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு விளம்பரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இவை நகர மற்றும் கிராம மக்கள் என பல்வேறு தரப்பு மக்களை எளிதாக சென்று சேர்வதால் தொலைக்காட்சியினை விட அதிகமாக விளம்பரங்கள் இணைய தளத்தில் வெளிவர துவங்கி உள்ளன. மேலும் குறைந்த அளவு கொண்டவையாக இருந்தாலும் அவை பார்ப்பவரின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனாலேயே பிகினி பெண்கள், சூப்பர் மாடல்கள் ஆகியோர் பயன்படுத்தப்படுகின்றனர்.

சனி, 4 செப்டம்பர், 2010

வியப்பூட்டும் விண்வெளி

.நா சபையின் 62 வது பொது சபை கூட்டம் 2009 ஆம் ஆண்டை உலக வானியல் ஆண்டாக அறிவித்து உள்ளது. மக்களிடையே வானியல் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிக அளவு மக்கம் வான்வெளி பற்றி அறிந்து கொள்ளவும் இந்த ஆண்டை வானியல் ஆண்டாக அறிவித்து உள்ளது.


பண்ணாட்டு வானியல் மையமும் (IAU INTERNATIONAL ASTRONOMICAL UNION) யுனஸ்கோ நிறுவனமும் இதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளன.
புகழ் பெற்ற வானியல் நிபுணர் கலீலியோ கலிலி விண்வெளி ஆய்வுக்காக டெலஸ் கோப் மூலம் ஆய்வை தொடங்கி 400 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்து உள்ளது. அவருடைய ஆய்வு ஜுபிடர் கிரகத்தின் 4 முக்கியமான துணைக்கோள்கள்,சந்திரனில் உள்ள மலைகள் மற்றும் எரி மலைகள்

சூரிய புள்ளிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ள வழிவகை செய்தது.

கலீலியோ பயன்படுத்திய டெலஸ்கோப் தான் வானியலின்

இந்த 400 ஆண்டுகால வளர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய நிலையில் இந்த அண்டத்தையும், விண்வெளியையும் 24 மணி நேரமும் பார்த்து ஆராய

வானியல் துறை வளர்ச்சி அடைந்து உள்ளது. கலீலியோ பிறந்த நாடான இத்தாலி ஐ.நா சபையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தது.


மனிதன்,பூமி நிலவு,கிரகங்கள், சூரியன், மற்றும் நட்சத்திரங்கள், பால் வெளி இவை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வத்திற்கு மனித சமுதாயம் எடுத்து கொண்ட முயற்சியே விண்வெளி பயணங்கள். ஆள் இல்லாத, ஆளோடு கூடிய விண்கலங்களை பூமியின் எல்லைகளுக்கு அப்பால் அனுப்பி இந்த பிரபஞ்சம் குறித்த பல உபயோகமான தகவல்களை பெறுவதற்கான ஒரு முயற்சியாக இது அமைந்து உள்ளது.



இந்த விண்வெளி பயணம் நமது பூமிக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதற்காகவும் சூரியன் கிரகங்கள், நட்சத்திரங்கள் எப்படி தோன்றின என்பதை ஆய்வு செய்வதற்காகவும் இந்த பூமிக்கு அப்பால் உயிரினங்கள், மற்றும் நம்மை போன்ற மனித சமுதாயங்கள் இருக்கின்றனவா என அறிந்து கொள்வதற்காகவும் மேற்கொள்ளபடுகின்றன.

விண்வெளி காலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. ஏனெனில் அன்றுதான் சோவியத் ரஷ்யா பூமியை சுற்றி வருவதற்காக தனது முதல் செயற்கை கோளான ஸ்புட்னிக்-1யை விண் வெளியில் ஏவியது.