செவ்வாய், 14 டிசம்பர், 2010

விண்வெளியில் பசி:

பூமியின் பல ஆயிரம்  மைல்களுக்கு மேலே பறக்கும் விண்கலத்தில் உணவுப்பொருட்கள் பூமியில் இருப்பதைப்போலவே சுவை உடையனவாக இருக்குமா? இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் இல்லை என்றே பதில் சொல்கிறார்கள்.எடையே இல்லாத சூழலில் உணவின் மணம் மூக்கிற்கு செல்ல வாய்ப்பில்லை.உணவின் சுவையில் மணம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிப்பது.ஆனால் விண்வெளி வீரர்கள் வாசனைகளை அறிய முடியாமல் சுவையை இழக்கிறார்கள்.
விண்வெளியில் வீரர்கள்   எடையில்லாமல் இருப்பதால்  விண்வெளி வீரர்களின் உடம்பின் மேற்புறம் நீர்  தேங்கி இருக்கும். எப்பொழும் அவர்களுக்கு (சளிபிடித்தால் மூக்கு அடைப்ப்ட்டு இருப்பது போல்) மூக்கு அடைத்து கொண்டிருக்கும்.

முதன் முதலில் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் போது அங்கு சிறிது நேரமே இருந்ததால் உணவு பிரச்சினையோ மற்ற பிரச்சினைகளோ எழவில்லை. இன்றைய விண்வெளி வீரர்களுக்கு  உணவு வகைகளை தேர்ந்து எடுக்க பல வகையான உணவு வகைகள் உம்ளன.அவர்கள் விண்வெளிக்கு செல்வதற்கு 5 மாதங்களுக்கு முன்பு ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் உம்ள விண்வெளி உணவுமுறைகள் ஆய்வு மையத்திற்கு சென்று அங்குள்ள உணவு வகைகள் 20 முதல் 30 வகைகளை ருசித்து பார்த்து அவைகளின் தோற்றம்,நிறம்,மணம்,சுவை, இவற்றின் அடைப்படையில் ஒவ்வொன்றுக்கும் ஒன்று முதல் 9 முடிய ஏதாவது ஒரு மதிப்பெண்ணை வழங்குவார்கள் எந்த உணவு 6 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெறுகிறதோ அந்த உணவு அவரது மெனுவில் சேர்க்கப்படும்.உணவு ஆலோசகர் ஒருவர் அந்த விண்வெளி வீரர் தேர்வு செய்த மெனுவில் உள்ள உணவு வகைகளில் அவருக்கு தேவையான எல்ல வகை சத்துக்களும் அடங்கி உள்ளதா என சோத்தித்த பிறகே விண்வெளி வீரரின் உணவு பட்டியல் இறுதி செய்யப்படும்.
     
சில சத்துக்கள் விண் வெளியில் குறைவாக எடுத்தாலே போதுமானது. உதாரணமாக பூமியில் இருப்பதை விட விண் வெளியில் விண்வெளி வீரர்களுக்கு குறைவான இரும்பு சத்து இருந்தாலே போதுமானது ஏன் என்றால் விண் வெளியில் அவர்கள் உடம்பில் ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும்.அதிக இரும்பு சத்து அதிக ரத்த சிகப்பணுக்களை உருவாக்கிவிடும்  ஆதலால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது அதே சமயத்தில் அவர்களுக்கு கால்சியம் வைட்டமின் டி சத்துக்கள் அதிகமாக தேவைப்படும் ஏனெனில் எடை குறைவான சூழ்நிலையில் அவர்கள்ள் வலுவுடன் இருக்க இந்த சத்துக்கள் மிக அவசியம்.

விண்வெளி பயண்த்திற்கான் ஐஸ்கிரீம் தேங்காய் கொழுப்பு, திட பால்  உணவு.மற்றும் சர்க்கரை இவை அனைத்தும் உறையவைக்கபட்டு உலர்த்தப்பட்டு கிïப்களாக மிக உயர்ந்த அழுத்தில் அழுத்தப்பட்டு உருவாக்கபடுகிறது. இந்த கிïப்களுக்கு ஜெலட்டின் கோட்டிங் கொடுக்கபடுகிறது. அப்பலோ 7 விண் கலத்தில் சென்ற வீரர்கம் தான்
இத்தகைய ஐஸ் கிரீம்களை சுவைத்த வீரர்கம்.
ஒரு விண் கலத்தில் ஒரு விண்வெளி வீரருக்கு ஒருநாளைக்கு 3.8 பவுண்ட் எடையுள்ள(1 பவுண்ட் பேக்கேஜிங்கையும் சேர்த்து) உணவு வைக்கப்பட்டு இருக்கும்.

விண் கலம் தனது நீர்த்தேவையை எரிபொருள் செல்களில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் பொழுது நீரையும் சேர்த்து தயாரித்து தனது நீர்த்தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை: