செவ்வாய், 14 டிசம்பர், 2010

உணவு பழக்க வழக்கம்

         விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் உணவருந்துகின்றனர் இந்த கேள்வியை 50 ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால் அதற்கான விடை இப்பொழுதுள்ள சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும். விண்வெளி பயணத்தின் தொடக்க காலங்களில் நீர் தன்மை எடுக்கபட்டு டிžப்களில் அடைக்கபட்டு இருந்த பேஸ்ட் போன்ற உணவுகளை ஸ்டராக்களின் மூலம் உறிஞ்சி தங்கள் உணவு தேவைய விண்வெளி வீரர்கள் பூர்த்தி செய்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பூமியில் இருப்பதைபோலவே விண்கலத்திலும் விண்வெளி வீரர்கள் உணவருந்த தொடங்கி விட்டனர்.புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில்  உணவு மற்றும் பருகும் திரவங்களை எச்சரிக்கையுடன் கையாளவிட்டால் அவை மிதக்க ஆரம்பித்து விடும் இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக உணவும், பருகும் திரவங்களும் நீர் உறிஞ்சப்பட்டு பவுடர் வடிவில் பாதுகாப்பாக அடைக்கபட்டு உள்ளன.பருகும் குளிர் பானங்களை அருந்த விரும்பும் விண் வெளி வீரர்கள்
ஒரு பிரத்யேக டிžப் மூலம் பவுடர்களில் தண்ணீர் சேர்த்து அருந்துகின்றனர்.உணவு பொருட்கள் அனைத்தும் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோநீர்த்தன்மை உறிஞ்சப்பட்டு கெடாமல் பாதுகாக்கபடுகின்றன.அசைவ உணவு வகைகள் ரேடியேசனுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் உபயோகத்
தன்மை நீட்டிக்கபடுகிறது.

பூமியில் சாப்பிடுவதைப்போலவே விண்வெளிவீரர்களும் ஒரு நாளைக்கு  3 வேளை உணவருந்துகின்றனர். இடையிடையே சிற்றூண்டிகளும் உண்டு. உணவுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கு முறையாக அவர்கள் உணவருந்தும் வரிசைப்படி அடுக்கப்பட்டு இருக்கும்.அவை தரையில் சிந்தி மிதக்காவண்ணம் ஒரு வலையில் பூட்டப்பட்ட டிரேகளில் பாதுகாப்பாக வைக்கபட்டு இருக்கும். உணவு வேளையின் போது விண்வெளிகலத்தின் மத்திய பகுதியில் இருக்கும் உணவருந்தும் இடத்திற்கு விண்வெளி வீரர்கள் செல்கின்றனர்.

உறையவைக்கபட்டு உலரவைக்கப்படு உள்ள உணவுகள்,மற்றும் நீர்த் தன்மை நீக்கபட்ட குளிர் பானங்களை நீர் சேர்க்கின்றனர். குளிர் நீர், சுடு நீர் பெறுவதற்கான ஒரு தனி சாதனம் விண்கலத்தில் வைக்கப்படு உள்ளது.
உணவுப்பொருட்கள் 160 டிகிரி முதல் 170 டிகிரி பேரண்ட் ஹிட் உள்ள ஏர் கண்விக்ஷன்களில் வைத்து சூடுபடுத்தி கொள்கின்றனர். சராசரியாக ஒருவேளை உணவை தயாரிப்பதற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை எடுத்து கொள்கின்றனர்.

விண்வெளி வீரர்கள் அவர்கள் உணவு அடங்கிய கண்டெய்னர்களை பேப்ரிக் பாஸ்ட்னர் உதவியுடன் ஒரு சாப்பாட்டு டிரேயில் இணைத்து இருப்பார்கள்.அந்த டிரே சுவர் அல்லது விண்வெளி வீரரின் இடுப்புடன் இணைந்து இருக்கும். கத்தரி கோலால் உணவு பாக்கெட்டுகளை திறந்து கத்தி போர்க் மற்றும் ஸ்பூன்களின் உதவியால் உணவருந்துகின்றனர்.
ஒவ்வொரு விண்கலத்திலும் விண்வெளி வீரர்களுக்கு அந்த விண்வெளி பயணம் முடியும் வரைக்கும் தேவையான உணவு சேமித்து வைக்கபட்டு இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவசர சூழ்நிலை கருதி ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் அதிகப்படியாக 3 வாரங்களுக்கு பயன்படுத்தக்கூடிய உணவு (ஒரு நாளைக்கு ஒரு விண்வெளி வீரருக்கு 2000 கலோரி சத்து அளிக்க கூடிய உணவு)இருப்பில் இருக்கும். இவை அனைத்தும் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக Ûவைக்க்கப்பட்டு இருக்கும்.
விண்வெளி வீரர்கள் சாப்பிடுவதற்கு நிறைய விதவிதமான உணவுப்பொருட்கள் இருந்தாலும் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் அவர்களது பசியின் அளவு குறைவாக இருக்கும், அவர்களால் உணவின் வாசனையை உணர முடியாது. எனவே உணவின் உண்மையான சுவை அவர்களுக்கு தெரியாது. உப்பு மிளகுத்தூள்,கெட்சப் முதலியவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அவை மிதப்பதை தவிர்ப்பதற்காக திரவ பானங்களில் உப்பு , மிளகுத்தூள் சேர்ப்பதை தவிர்க்கின்றனர். விண்வெளி வீரர்கள் பலவகையிலும் பாதுகாக்கபட்ட பதப்படுத்தப்பட்ட நவீன கருவிகளின் உதவியோடு தயாரிக்கபட்ட சாதாரண உணவு வகைகளை திருப்தியாக உண்ண முடிகிறது.

சாதாரண உணவுகளுக்கும் விண்வெளி உணவுகளுக்கும் அதை தயாரிப்பதிலும், பேக்கிங் செய்வதிலும் மட்டுமே வேறுபாடு உள்ளது. விண்வெளி உணவுகளை மிக கவனமாக பேக்கிங் செய்யப்படு இருக்க வேண்டும்.சிறு துகள் கூட விண்வெளி கலத்தில் சிதறுமே ஆனால் மிககுறைந்த புவி ஈர்ப்பு விசை உள்ள சூழ்நிலையில் அவை விண்வெளிகலத்தில் உள்ள வெளியேற்றும் பாதைய அடைத்து கொள்ளாலாம் அல்லது விண் வெளி வீரரகளின் மூக்கு மற்றும் வாயில் சென்று அவர்களுக்கு சுவாசத்தில் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

விண்வெளியில் பசி:

பூமியின் பல ஆயிரம்  மைல்களுக்கு மேலே பறக்கும் விண்கலத்தில் உணவுப்பொருட்கள் பூமியில் இருப்பதைப்போலவே சுவை உடையனவாக இருக்குமா? இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் இல்லை என்றே பதில் சொல்கிறார்கள்.எடையே இல்லாத சூழலில் உணவின் மணம் மூக்கிற்கு செல்ல வாய்ப்பில்லை.உணவின் சுவையில் மணம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிப்பது.ஆனால் விண்வெளி வீரர்கள் வாசனைகளை அறிய முடியாமல் சுவையை இழக்கிறார்கள்.
விண்வெளியில் வீரர்கள்   எடையில்லாமல் இருப்பதால்  விண்வெளி வீரர்களின் உடம்பின் மேற்புறம் நீர்  தேங்கி இருக்கும். எப்பொழும் அவர்களுக்கு (சளிபிடித்தால் மூக்கு அடைப்ப்ட்டு இருப்பது போல்) மூக்கு அடைத்து கொண்டிருக்கும்.

முதன் முதலில் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் போது அங்கு சிறிது நேரமே இருந்ததால் உணவு பிரச்சினையோ மற்ற பிரச்சினைகளோ எழவில்லை. இன்றைய விண்வெளி வீரர்களுக்கு  உணவு வகைகளை தேர்ந்து எடுக்க பல வகையான உணவு வகைகள் உம்ளன.அவர்கள் விண்வெளிக்கு செல்வதற்கு 5 மாதங்களுக்கு முன்பு ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் உம்ள விண்வெளி உணவுமுறைகள் ஆய்வு மையத்திற்கு சென்று அங்குள்ள உணவு வகைகள் 20 முதல் 30 வகைகளை ருசித்து பார்த்து அவைகளின் தோற்றம்,நிறம்,மணம்,சுவை, இவற்றின் அடைப்படையில் ஒவ்வொன்றுக்கும் ஒன்று முதல் 9 முடிய ஏதாவது ஒரு மதிப்பெண்ணை வழங்குவார்கள் எந்த உணவு 6 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெறுகிறதோ அந்த உணவு அவரது மெனுவில் சேர்க்கப்படும்.உணவு ஆலோசகர் ஒருவர் அந்த விண்வெளி வீரர் தேர்வு செய்த மெனுவில் உள்ள உணவு வகைகளில் அவருக்கு தேவையான எல்ல வகை சத்துக்களும் அடங்கி உள்ளதா என சோத்தித்த பிறகே விண்வெளி வீரரின் உணவு பட்டியல் இறுதி செய்யப்படும்.
     
சில சத்துக்கள் விண் வெளியில் குறைவாக எடுத்தாலே போதுமானது. உதாரணமாக பூமியில் இருப்பதை விட விண் வெளியில் விண்வெளி வீரர்களுக்கு குறைவான இரும்பு சத்து இருந்தாலே போதுமானது ஏன் என்றால் விண் வெளியில் அவர்கள் உடம்பில் ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும்.அதிக இரும்பு சத்து அதிக ரத்த சிகப்பணுக்களை உருவாக்கிவிடும்  ஆதலால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது அதே சமயத்தில் அவர்களுக்கு கால்சியம் வைட்டமின் டி சத்துக்கள் அதிகமாக தேவைப்படும் ஏனெனில் எடை குறைவான சூழ்நிலையில் அவர்கள்ள் வலுவுடன் இருக்க இந்த சத்துக்கள் மிக அவசியம்.

விண்வெளி பயண்த்திற்கான் ஐஸ்கிரீம் தேங்காய் கொழுப்பு, திட பால்  உணவு.மற்றும் சர்க்கரை இவை அனைத்தும் உறையவைக்கபட்டு உலர்த்தப்பட்டு கிïப்களாக மிக உயர்ந்த அழுத்தில் அழுத்தப்பட்டு உருவாக்கபடுகிறது. இந்த கிïப்களுக்கு ஜெலட்டின் கோட்டிங் கொடுக்கபடுகிறது. அப்பலோ 7 விண் கலத்தில் சென்ற வீரர்கம் தான்
இத்தகைய ஐஸ் கிரீம்களை சுவைத்த வீரர்கம்.
ஒரு விண் கலத்தில் ஒரு விண்வெளி வீரருக்கு ஒருநாளைக்கு 3.8 பவுண்ட் எடையுள்ள(1 பவுண்ட் பேக்கேஜிங்கையும் சேர்த்து) உணவு வைக்கப்பட்டு இருக்கும்.

விண் கலம் தனது நீர்த்தேவையை எரிபொருள் செல்களில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் பொழுது நீரையும் சேர்த்து தயாரித்து தனது நீர்த்தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது.